கோலிவுட்டில் புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன்.
இப்படங்களை இயக்கியதோடு, மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உள்பட பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், கே.பி.ஜெகன் தற்போது 'ரோஜா மல்லி கனகாம்பரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குவதுடன் இப்படத்தில் நாயகனாகவும் அவர் நடிக்கிறார்.
இப்படத்தை 'யுனைடெட் ஆர்ட்ஸ்', எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் டீஸர் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இதனை, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளுடன் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர்," வாழ்த்துகள் அன்பு அண்ணன் ஜெகன் சார். இந்த படம் உங்கள ஒரு நல்ல நடிகராகவும், ஒரு சிறந்த இயக்குனராகவும் நிலை நிறுத்தும்.. லவ் யூ" என குறிப்பிட்டுள்ளார்.


