TamilsGuide

பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய இலங்கையர்

21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட 'குஷ்' போதைப்பொருளுடன் இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வந்துள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2.7 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த 28 வயதானவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் அவரது பயணப் பைகளுக்குள் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment