TamilsGuide

கிறிஸ்தவர்களை கொலை செய்தால் இதுதான் நடக்கும் - நைஜீரியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை 

நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், நைஜீரியா அரசுக்கு அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கிறிஸ்தவர்களை கொன்று குவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், உதவிகள் நிறுத்தப்பட்டு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

Leave a comment

Comment