TamilsGuide

யாழில் 4கோடி ருபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடற்படையினர் அவதானித்து, அதனை மடக்கி சோதனைமேற்கொண்டிருந்தனர்.

அதன் போது படகினுள் இருந்து, சுமார் 185 கிலோ நிறையுடைய கஞ்சா போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 41 மில்லியன் ரூபாய் பெறுமதியானது எனவும், மீட்கப்பட்ட கஞ்சா, மற்றும் படகு என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நெடுந்தீவு பொலிசாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
 

Leave a comment

Comment