TamilsGuide

70 ஆண்டு காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல்

கடந்த 70 ஆண்டு காலத்தில் பிரான்ஸை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் ( Emmanuel Macron) புகழ் கீழ் மட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகின்றது.

லீ பிகாரோ ( Le Figaro) பத்திரிகைக்கான வெரியன் (Verian) கருத்துக் கணிப்பின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. பிரெஞ்சு மக்களில் வெறும் 11 சதவீதமானோர் மட்டுமே மக்ரோனை ஆதரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸில் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து வந்த பிரதமர்கள் பதவி விலகியதால் மக்களின் நலச்சீர்த்திருத்தங்களில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மக்ரோன் அரசாங்கத்தின் செலவீன குறைப்பு சட்டமூலம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்த போதும் ஜனாதிபதி அந்த கோரிக்கைகளை மறுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போதை அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ள தன்காரணமாகவே ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் புகழ் குறைந்த மட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment