TamilsGuide

குரல்கள், இசைக்கருவிகளின் இணக்கம் பவதாரிணி- புதிய அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா

பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த 2024ம ஆண்டு ஜனவரி 25ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் இலங்கையில் காலமானார்.

பவதாரணியின் மறைவை தொடர்ந்து, மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இளையராஜா பவதாரிணியின் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்க உள்ளதாக அறவித்திருந்தார்.

அதாவது, 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய ஆர்கெஸ்ட்ரா குழுவைத் தொடங்க இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இளையராஜா தன் மகள் நினைவாக பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா (Bhavatha Girls orchestra) ஒன்றை தொடங்கியுள்ளார்.

திறமையுள்ள பாடகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இளையராஜா பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா-வில் இணைய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான போஸ்டரில்," நீங்கள் ஒரு ஆர்வமுள்ள பாடகர் அல்லது இசைக்கலைஞராக இருந்தால், இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள், இது உங்களை பிரகாசிக்கும் மேடை...

அதனால், உங்கள் திறமைகள் மற்றும் உங்கள் சுயவிவரம், தொடர்பு விவரங்களுடன் allgirlsorchestra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள், விரைவில் உங்களைத் தொடர்புகொள்வேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment