TamilsGuide

பொத்தி பொத்தி உன்னை வச்சி.. கும்கி 2 படத்தின் முதல் பாடல்

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

தொடர்ந்து, பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கும்கி 2 படத்தின் டீசர் அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'பொத்தி பொத்தி உன்னை வச்சி' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடலை மோகன் ராஜ் வரிகளில் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார்.

கும்கி 2 படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment