தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கும் அஜித்குமார் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
நேர்காணலில் பேசிய அஜித்குமார், "ரசிகர்களின் அன்பு காரணமாக தான் நான் இந்த நிலைமையில் இன்று இருக்கிறேன். ஆனால் அவர்களின் அன்பையும் கனவை ஈர்ப்பையும் நாம் கண்காணிக்க வேண்டும்.
திரையரங்கு உரிமையாளர்கள் பல லட்சங்கள் செலவு செய்து, தியேட்டரை புதுப்பிக்கிறார்கள். ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் திரையரங்கிற்கு உள்ளே பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை உடைப்பது, Once More கேட்டு திரையை கிழிப்பது இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்"என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, "கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவரும் இதற்கு பொறுப்புதான். ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


