கனடாவின் நீர், விவசாயம் மற்றும் சக்திவளத்துறைகளின் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய இணைய பாதுகாப்பு மையம் இந்த எச்சரிக்கயை விடுத்துள்ளது. இணயைத்தில் ஊடுறுவல்களை மேற்கொண்டு தாக்குதல்களை மேறகொள்ள முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் இணையத்தின் மூலம் அணுகக்கூடிய கட்டுப்பாட்டு அமைப்புகள் (control systems) மீது பல தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஊடுறுவல் முயற்சிகள் தொடர்பில் விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீரழுத்த கட்டுப்பாட்டை மாற்றியதால் ஒரு சமூகத்திற்கு நீர்விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும், மற்றொரு சம்பவத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் தானியங்கி டேங்க் அளவையர் தவறாகச் செயல்பட்டு பொய்யான எச்சரிக்கைகளை உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கனேடிய விவசாயப் பண்ணையில் தானியங்கி தானிய உலர்த்தும் சிலோவில் (grain drying silo) வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் மாற்றப்பட்டு அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டதாகவும் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக நீர், உணவு மற்றும் உற்பத்தித் துறைகள் போன்ற சைபர் பாதுகாப்பு ஒழுங்குமுறை இல்லாத துறைகள் அதிக கவனம் செலுத்த வேண்டியவை எனவும் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


