TamilsGuide

மனிதன் நிலவில் கால் பதித்தது குறித்து எழுந்துள்ள சர்ச்சை - நாசாவின் விளக்கம்

1969ஆம் ஆண்டு நடைபெற்ற நிலா பயணம் உண்மையல்ல என்று கூறிய அமெரிக்காவின் பிரல தொலைக்காட்சி நட்சத்திரம் கிம் கார்டாஷியன்-இன் கூற்றுக்கு அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, பதிலளித்துள்ளது.

கிம் கார்டாஷியன் தனது தொலைக்காட்சி தொடரில் “1969-ஆம் ஆண்டு நடந்த நிலா இறக்கம் உண்மையில் நடைபெறவில்லை” என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ஆம், நாங்கள் நிலவுக்கு சென்றுள்ளோம். அது ஒருமுறை அல்ல, ஆறு முறை!” என நாசா தற்காலிக நிர்வாகி சீன் டஃபி பதிலளித்துள்ளார்.

சமூக ஊடகத்தின் ஊடாக அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் அபோல்லோ 11 மிஷனில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் 1969-இல் நிலவில் முதல் தடவையாக காலடி வைத்தனர்.

சுமார் 50 ஆண்டுகளாக, நிலா பயணத்தைப் பற்றிய முரண் கோட்பாடுகள் பல முறை மறுக்கப்படுவதுடன் அதற்கான விளக்கங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.  
 

Leave a comment

Comment