TamilsGuide

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் வீழ்ச்சி 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 3.9 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நேற்று வரையிலான பத்து மாதங்களில் இந்த வீழ்ச்சி பதிவாகியள்ளது.

கடந்த பத்து மாதங்களில் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 10.7 சதவீதம் வலுப்பெற்றிருந்தது.

கடந்த ஒரு வருடத்தின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபா ஒன்றின் பெறுமதி 300 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment