TamilsGuide

கரூர் கூட்ட நெரிசல் - முதன்முறையாக மனம் திறந்த அஜித் குமார்..

கரூரில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமை நடந்த பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கிய விஜய் அண்மையில் அவர்களை சென்னை வரவழைத்து ஆறுதல் கூறி அனுப்பினார்.

இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது இந்த துயர சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித் குமார் மனம் திறந்துள்ளார்.

அவர் கூறியதாவது, நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவருக்கும் பொறுப்புதான். ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு.

கூட்டம் திரட்டுவதை பெரிய விஷயமாக்குவதை நிறுத்த வேண்டும். கிரிக்கெட்டில் கூட்டம் கூடினாலும் இப்படி நடப்பதில்லை. தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் ஏன் இப்படி? இது நம் திரையுலகை உலகளவில் தவறாகக் காட்டுகிறது.

ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment