TamilsGuide

ஆனந்த்ராஜ், சம்யுக்தா நடித்த மதராஸ் மாஃபியா கம்பெனி டிரெய்லர்

 அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் 'மதராஸ் மாஃபியா கம்பெனி'. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.

ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.

படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முனிஷ்காந்த், தீபா, ஷகீலா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

அண்ணா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். நேற்று மாலை வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் கவனம் பெற்று வருகிறது. 

Leave a comment

Comment