TamilsGuide

தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்தார் மன்னர் Charles

பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் (Charles) அவரது தம்பி ஆண்ட்ருவின் (Andrew) இளவரசர் பட்டத்தைப் பறித்து, அவரை அரண்மனையிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்.

அரண்மனை அது குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில்,

65 வயது ஆண்ட்ரு, காலஞ்சென்ற எலிசபெத் அரசியாரின் இரண்டாவது மகன். ஆண்ட்ரு இனி கிழக்கு இங்கிலாந்தில் தனிப்பட்ட வீட்டில் தங்குவார் என்று அறிக்கை குறிப்பிட்டது.

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டெயினுடன் (Jeffrey Epstein) அவருக்கு இருந்த தொடர்புகளால் ஆண்ட்ரு மீது நடவடிக்கை எடுக்க நெருக்குதல் வந்தது.

குற்றச்சாட்டுகளை ஆண்ட்ரு மறுக்கும் நிலையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டதாக அரண்மனை குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment