TamilsGuide

கனடாவில் இந்திய வம்சாவளியினர் மீதான வன்முறை அதிகரிப்பு

கனடாவில், சமீப காலமாகவே சீக்கியர் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீதான வன்முறை அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில், பொலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தில், நான்கு மாதத்தில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அதேவேளை சீக்கிய தொழிலதிபர் ஒருவர் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பஞ்சாபி பாடகர் சானி நாட்டனின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உட்பட பல கொலை சம்பவங்களுக்கு, கனடா உட்பட பல நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல குற்றக் குழு தலைவர் லோரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார்.
 

Leave a comment

Comment