TamilsGuide

வர்த்தகப் பிரச்னைகளை தீர்க்க அமெரிக்கா - சீனா இடையே உடன்பாடு

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ், சோளம் போன்ற விவசாய பொருட்களையும், கச்சா எண்ணெயையும் வாங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது.

அதே சமயம் அரிய பூமி தாதுக்களை அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.

முன்னதாக முக்கிய வர்த்தகப் பிரச்னைகளைத் தீர்க்க இருநாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்த நிலையில், சீனா மீதான வரியை 57%லிருந்து 47%ஆக குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment