TamilsGuide

அமெரிக்கா - கனடா எல்லையில் இந்திய வம்சாவளி நபர் கைது - சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்கா - கனடா எல்லையில் ரூ.62 கோடி போதைப்பொருளுடன் இந்திய வம்சாவளி டிரைவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி லாரி டிரைவர் சுர்ஜ் சிங் சலாரியா. இவர் தனது லாரியில் ரூ.62 கோடி மதிப்புள்ள 77 கிலோ கோகைன் போதைப்பொருளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவில் இருந்து கனடா புறப்பட்டார்.

ஆல்பர்ட்டாவில் உள்ள ஒருங்கிணைந்த சுங்கச்சாவடியில் அவர் சிக்கிக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அல்பர்டா நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சுர்ஜ் சிங் சலாரியா ஒரு கால்கேரியா பகுதியில் குடியிருந்தவர் என்பதைத் தவிர வேறு எந்த விவரங்களும் கிடைக்கவில்லை.

அவர் கனடாவில் சட்டப்பூர்வமாக வசிப்பவரா அல்லது அத்துமீறி நுழைந்தவரா என்பது தெரியவில்லை.  
 

Leave a comment

Comment