தஞ்சையில் ஓர் சிறப்புக் கூட்டம் அண்ணாவோடு என்னையும் பேச அழைத்திருந்தார்கள். தன்னோடு பயணம் செயும்படி அண்ணா அழைத்தார். இரயில் புறப்பட்டதும் இருவரும் சிறிது நேரம் பேசிக்பொண்டிருந்தோம். எனக்கு தூக்கம் வந்தது உனக்கு தூக்கம் வந்தால் படுத்துத் தூங்கு என்றார்.
நாம் மேலே படுப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏறி அமர்ந்து தலைக்கு என் பையை வைத்து அதன் மேல் அண்ணா கொண்டுவந்திருந்த அவருடைய போர்வையை வைத்து படுத்துத் தூங்கிவிட்டேன்.
இரவு 3 மணி இருக்கும். இயற்கையின் தொல்லையைத் தணித்துக்கொள்ள கீழே இறங்கினேன். அங்கே அண்ணா குளிர் தாங்க முடியாமல் தன் இரு கைகளாலும் உடம்பைப் போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். என்னை எழுப்பி அந்தப் போர்வையை கேட்டால் என் தூக்கம் கலைந்து விடுமே என்ற எண்ணம், அந்த கடுங்குளிரையும் அவரை தாங்கிக்கொள்ளச் செய்தது. அழுதுவிட்டேன். என் தலைவர் என்று அது வரை எண்ணியிருந்தேன். இல்லை என் தாய் என்று எனக்கு உணர்த்தினார் "
-, தத்துவ மேதை டி.கே.சீனிவாசன்


