TamilsGuide

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுப்பட்ட உழவு இயந்திரம் பொலிஸாரால் பறிமுதல்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலி  பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ் .பி. திஸ்ஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று அதிகாலை குறித்த பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை ஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்று கடந்த வாரம் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி பொலிஸாருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய உழவு இயந்திரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment