கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல், விமான ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு சவுதி அரேபிய பயணியைத் தடுக்க முயற்சிக்கும் பதட்டமான சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் பயணிகள் ஆசனப் பட்டிகளை அணிந்துகொண்டு இருக்க வேண்டும்.
ஆனால் குறித்த சவுதி நாட்டவர், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றதன் விளைவாக இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விமான நிலைய பொலிஸார் உறுதிப்படுத்தினர்.


