TamilsGuide

இராணுவப் பயிற்சியின் போது ஏற்பட்ட வெடிப்பில் 03 சிப்பாய்கள் காயம்

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவ சிப்பாய்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (29) காலை மதுரு ஓயா இராணுவ பயிற்சி முகாமில் நடந்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்த வீரர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் தற்போது நடத்தப்பட்டு வரும் கூட்டு இராணுவப் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
 

Leave a comment

Comment