TamilsGuide

கனடா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் இளைஞர்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் வேலைகளைப் பெறுவதுகூட நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது.

நாட்டின் இளைஞர் வேலைஇல்லா விகிதம் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கனடா புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின் படி, செப்டம்பர் மாதத்தில் இளைஞர் வேலைஇல்லா விகிதம் 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது 2010க்குப் பிறகு காணப்பட்ட மிக உயர்ந்த நிலையாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமாகியுள்ளது.

நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிக்காத சூழல் இளைஞர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது தெரிவிக்கபப்டுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்கள் நிரப்ப முயற்சிக்கும் வேலைவாய்ப்புகள் 15 சதவீதம் குறைந்துள்ளன என அரச புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வேலைவாய்ப்பு சந்தை மிகுந்த நெரிசலாகி வருகிறது. ஒவ்வொரு பதவிக்கும் பல விண்ணப்பங்கள் வருவதால் தேர்வு செய்வது கடினமாகியுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
 

Leave a comment

Comment