TamilsGuide

இலங்கை ஒலிபரப்புச் சேவையின் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவு பற்றிய சில தகவல்கள்

இலங்கையில் பொதுமக்களுக்கான ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடையும் விழாவுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கை வானொலியின் மூத்த ஒலிபரப்பாளர்கள் மற்றும் அதனுடன் நெருங்கிய தொடர்புகளைப்பேணிய அறிஞர்கள்இ கலைஞர்களின் வாழ்த்துச் செய்திகள் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
இவ்வேளையில் இலங்கை ஒலிபரப்புச் சேவையின் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவு பற்றிய சில தகவல்களைப் பதிவிடுவது அவசியமென்று கருதுகிறேன்.
ஒலிபரப்பு என்றவுடன் மக்களால் அறியப்படுபவர்கள் முதலில் அறிவிப்பாளர்கள்இ குறிப்பாக வர்த்தகசேவை அறிவிப்பாளர்கள்இ அடுத்து செய்தி வாசிப்பவர்கள்இ அதற்கடுத்ததாக சிலவகையான நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள்இ குறிப்பாக நாடகத் தயாரிப்பாளர்கள். ஆனால்இ இவர்கள் மட்டுமே ஒலிபரப்புச் சேவையை நடத்துபவர்களல்ல.

ஒலிபரப்புச் சேவையொன்றை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பலரின்இ பலவிதமான சேவைகள் ஒத்திசைவுடன் இயங்கவேண்டும். பெரும்பாலும் அறிவிப்பாளர்களைத் தவிர ஒலிபரப்பு சார்ந்த ஏனைய பணிகளைச் செய்வோரை அறியும் வாய்ப்பு பொதுமக்களுக்குக் கிடைப்பதில்லை.
ஒருநாட்டின் பொதுமக்களுக்கென நடத்தப்படும் நிறுவன ரீதியான ஒலிபரப்புச் சேவையில்இ அதற்குரிய தரக்கட்டுப்பாடுகளைப் பேணி பொதுமக்களின் அறிவையும் இரசனையையும் வளர்க்கும் விதத்திலான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டுஇ அத்திட்டங்களை நிறைவேற்றுவதுஇ ஒலிபரப்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்யக்கூடியவர்களைத் தேர்ந்தெடுப்பதுஇ சமூகநலனைப் பேணக்கூடிய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பணியை நடைமுறைப்படுத்துவதுஇ அப்பணிகளைச் செய்யும்போது ஏற்படக்கூடிய நிர்வாகப் பிரச்சனைகள்முதல் பணியாளர்களின் பிரச்சனைகள்வரை கையாள்வது என்று பல அம்சங்கள் இருக்கின்றன.
இத்தகைய பொறுப்புவாய்ந்த பணிகளை நிர்வாகத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்களே செய்வார்கள். இவர்கள்தான் ஒலிபரப்புச் சேவையொன்றின் அன்றாட செயற்பாடுகளை நிர்வகிப்பவர்கள்.
இந்தவகையில் இலங்கை ஒலிபரப்பச் சேவையில் தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாகவிருந்து சேவையாற்றியவர்களை இந்த நூற்றாண்டுத் தருணத்தில் நாம் நினைத்துப்பார்ப்பது மிக அவசியமானது.
1925ஆம் ஆண்டுஇ இலங்கையில் ஒலிபரப்புச்சேவை ஆரம்பிக்கப்பட்டபோதும் 1943ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஒலிபரப்பப்ட்ட தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் ஒலிபரப்பாளர்கள் பற்றிய விபரங்களைப் பெறமுடியவில்லை.
ரொறிங்டன் சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வானொலி நிலையம்இ இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது கொழும்புஇ பொரல்ல கொட்டா றோட்டுக்கு இடம்பெயர்ந்துஇ கொழும்பு வானொலி நிலையமென்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த காலத்திலிருந்துதான் தமிழ் ஒலிபரப்பாளர்கள்பற்றி ஓரளவு அறியக்கூடியதாக இருக்கிறது.
1970களின் பிற்பகுதியில் தமிழ்ச்சேவையின் மேலதிக பணிப்பாளராக இருந்த திருமதி. ஞானம் இரத்தினம் அவர்களின் ‘The Green Light’ என்ற நூலில் 1943ஆம் ஆண்டில் கொட்டா றோட்டில் இயங்கிய கொழும்பு வானொலி நிலையத்தில் சோ. சிவபாதசுந்தரம் அவர்கள் அறிவிப்பாளராகப் பணியாற்றியதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர்இ வீ. என். பாலசுப்ரமணியம்இ எஸ். நடராஜாஇ சீ. குஞ்சிதபாதம்இ செந்தில்மணி குலசிங்கம் (பின்னர் திருமதி. மயில்வாகனம்) ஆகியோர் அறிவிப்பாளர்களாகப் பணியாற்றத் தொடங்கினார்கள் என்றும் ஆனால்இ அவர்கள் எந்தெந்த ஆண்டுகளில் இணைந்துகொண்டார்கள் என்பதுபற்றிய விபரங்களை அறிந்துகொள்ளமுடியவில்லையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய அறிவிப்பாளர்களே அறிவிப்புகளைச் செய்தார்களென்றும் செய்திகளைத் தொகுத்துஇ அவற்றுக்கான மொழிபெயர்ப்புகளைச்செய்து வாசித்தார்கள் என்றும் அறியமுடிகிறது.
பின்னர்இ 1948ஆம் ஆண்டுதான் முதல்முதலாக மொழிவாரியான நிகழ்ச்சி அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள் என்றும் அவ்வாறு தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாக முதல்முதலில் நியமிக்கப்பட்டவர் மோனி எலாயஸ் (Moni Elias). இவர் இந்தியாவைச்சேர்ந்த மலையாள இனப்பெண்மணி. அவருடைய பதவிப் பெயர் நிகழ்ச்சி உதவியாளர்-தமிழ். ஆந்த நேரத்தில் சோ. சிவபாதசுந்தரம் அவர்கள் நாட்டில் இருக்கவில்லை. B.B.C. யில் ‘தமிழோசை’ நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் பணியை ஏற்று இங்கிலாந்து சென்றுவிட்டார்.
1949ஆம் ஆண்டுஇ டிசம்பர் மாதம் 31ஆம் திகதி கொட்டாறோட்டில் ஒலிபரப்பை நிறுத்திய கொழும்பு வானொலிஇ 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து ரொரிங்டனில் புதிதாக அமைக்கப்பட்ட வானொலி நிலையத்தில் இலங்கை வானொலி (Radio Ceylon) என்ற பெயரில் இயங்கத் தொடங்கியபோதுதான் அதன் நிரவாகக் கட்டமைப்பு பெரிதாக்கப்பட்டு மும்மொழிச் சேவைகளுக்கும் மற்றும் கல்விச்சேவைக்கும் பொறுப்பாகத் தனித்தனியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.
அவ்வதிகாரிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டாலும் அவர்களின் பதவிக்கு இயக்குநர் என்ற பெயர் வழங்கப்படவில்லை. இந்த அதிகாரிகள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவ்வாறு தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளரென்ற பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் சோ. சிவபாதசுந்தரம் அவர்கள். அதுவரை தமிழ் நிகழ்ச்சிகளுக்கான உயர் பதவியிலிருந்த மோனி எலாயஸ் அவர்கள் கல்வி நிகழ்ச்சிகள் பிரிவின் அமைப்பாளராகப் பதவியேற்றார்.
தமிழ் நிகழ்ச்சிகள் அமைப்பாளர் என்ற பதவி ஆங்கிலத்தில் Tamil Programme Organizer என்று அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் சுருக்கமாக TPO என்று குறிப்பிடப்படும். 1950ஆம் ஆண்டு TPO வாக நியமிக்கப்பட்ட சிவபாதசுந்தரம் அவர்கள் 1952ஆம் ஆண்டு பதவி விலகிச் சென்றுவிடவே கே. எஸ். நடராஜா அவர்கள் TPO வாக நியமிக்கப்பட்டார்.
நான் இதுவரை கூறியவை அனைத்தும் அப்போது இயங்கிக்கொண்டிருந்த தேசியசேவைக்கான நிர்வாகக் கட்டமைப்பு.
1950ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்டமைபின்போதுதான் வர்த்தகசேவை ஆரம்பிக்கப்பட்டது. க்ளிஃபோர்ட் டொட் (Clifford Dodd ) என்ற அவுஸ்திரேலியரை இயக்குநராகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வர்த்தகசேவையின் நிர்வாகக் கட்டமைப்பு படிப்படியாக விரிவடைந்தது. ரிம் ஹோ~pங்டன் (Tim Horshington) என்பவர் வர்த்தகசேவையின் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேர்ணன் கொரயாஇ புறொஸ்பர் ஃபர்னாண்டோஇ கிறிஸ்ற்றி கந்தையாஇ எஸ். பீ. மயில்வாகனம் ஆகிய ஆங்கிலஇ சிங்களஇ தமிழ் அறிவிப்பாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
1950 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிர்வாக விரிவாக்கத்தின் பின் 1967ஆம் ஆண்டிலும் 1971ஆம் ஆண்டிலும் இலங்கை வானொலி பெரும் நிர்வாகக் கட்டமைப்பு மாற்றங்களுக்கு உள்ளானது. அது தமிழ் நிகழ்ச்சி நிர்வாகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும் அதன் உயர் நிர்வாகிகள் பற்றியும் எனது அடுத்த பதிவில் சுருக்கமாக எழுதுவேன்
நான் ஏற்கனவே கூறியவாறு இப்பதிவில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களை திருமதி. இரத்தினம் அவர்களின் த க்றீன் லைற் என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்திருக்கிறேன். மேலதிகமாக உறுதியான தகவல்கள் தெரிந்தவர்கள் தயவுசெய்து பதிவிடவும்.

 

படம் - 1
சோ. சிவபாதசுந்தரம்
படம் - 2
மோனி எலாயஸ்
படம் - 3
எஸ். பீ. மயில்வாகனம்
படம் - 4
திருமதி. ஞானம் இரத்தினம்
படம் - 5
த க்றீன் லைற் - நூல்

-- P Wikneswaran Paramananthan
 

Leave a comment

Comment