யாழ்ப்பாணம் நண்பர் பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும் மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டேன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைத்துறை வேந்தர் ரகுராம் சிவகுரு ஆதீனம் வேலன் சுவாமிகள் இருவரும் எனக்குச் சிறப்பு செய்தனர்
"யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன்;
புலம்பெயர்ந்த
உலகத் தமிழர்களோடு
உரையாட விழைகிறேன்
நீங்கள் விளையாடிய
வீதிகள் நலம்;
குடைபிடிக்கும்
வேப்ப மரங்கள் நலம்
சாவகச் சேரி சௌக்கியம்;
நீங்கள் சௌக்கியமா?
பருத்தித்துறை சௌக்கியம்;
உங்கள் பாச உறவுகள்
சௌக்கியமா?
முகமாலை நலம்;
உங்கள் முன்னோடிகள் நலமா?
புத்தூர் சௌக்கியம்;
உங்கள் பிள்ளைகள் சௌக்கியமா?
உங்கள்
தலைமுறை வரைக்கும்
தமிழ் ஈழத்தின்மீது
உங்களுக்கு தாகம் இருக்கும்
உங்கள் பிள்ளைகளுக்கும்
அதேதாகம் வேண்டுமாயின்
அவர்களையும்
தமிழ்படிக்கச் செய்யுங்கள்
மண்ணும் மொழியும்
கண்ணும் உயிரும்
என்று கற்றுக்கொடுங்கள்
விதைகளும் தியாகங்களும்
என்றைக்கும் வீணாவதில்லை;
ஒருநாள் முளைத்தே தீரும்"
என்று பேசினேன்
கண்ணீர் ததும்பக்
கரவொலி செய்தார்கள்


TamilsGuide
யாழ்ப்பாணம் நண்பர் பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும் மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா
