TamilsGuide

டொரொண்டோவில் உறைபனிபொழிவு குறித்து எச்சரிக்கை

டொரொண்டோ பெரும்பாக பகுதி மற்றும் நயாகரா பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு உறைபனிபொழிவு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை டொரொண்டோ நகரம், மிசிசாகா–ப்ராம்ப்டன், நயாகரா ஃபால்ஸ்–வேலண்ட்–தெற்கு நயாகரா பிராந்தியம், மற்றும் செயின்ட் கத்தரீன்ஸ்–கிரிம்ஸ்பி–வடக்கு நயாகரா பிராந்தியம் ஆகிய பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக சில பயிர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது,” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தங்கள் மரங்கள் மற்றும் செடிகளை மூடிப்பாதுகாக்குமாறும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 

Leave a comment

Comment