அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், பத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு விமான நிலையங்களில் சுமார் ஒரு மணி நேரம் வரையில் விமான சேவையில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த விமான சேவைகளின் தாமதங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாகவும் தொடர்வதாகவும் இதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கமே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையம் நேற்று பிற்பகல் அமெரிக்க நேரப்படி அதிகாலை 12:59 மணி வரை தாமதமாக தரையிறங்கியுள்ளது.
சராசரியாக விமானங்கள் சுமார் 82 நிமிடங்கள் தாமதமாகியதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
பாஸ்டனில், ஓடுபாதையில் ஒரு விமானம் செயலிழந்ததால் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க நேரப்படி மாலை 4:30 மணி வரை தரை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
நேற்று காலை 8:30 மணியளவில், பணியாளர் பற்றாக்குறை காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் உள்ள ஓக்லாந்து சர்வதேச விமான நிலையமும் அந்த தரை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்க அரசாங்க முடக்கம் தொடர்வதால் சுமார் 13 ஆயிரம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் மற்றும் சுமார் 50 ஆயிரம் போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பளமின்றி வேலைசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார இறுதியில் மேலும்; அதிகமானோர் வேலைப்புறக்கணிப்பை மேற்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்குக் குடியரசுக் கட்சியும் மற்றும் ஜனநாயகக் கட்சியும் ஒன்றையொன்று மாறி மாறி விமர்சித்து வருகின்றன.
இந்தநிலையில், தொழிற்சங்கங்களும் விமான நிறுவனங்களும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணும்படிக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


