TamilsGuide

தடை தாண்டும் ஓட்டத்தில் ரொஷான் ரணதுங்க வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலங்கை சார்பில் கலந்துகொண்ட ரொஷான் ரணதுங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

குறித்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரருக்கு ரொஷான் ரணதுங்க இறுதிவரை கடுமையான சாவாலை கொடுத்திருந்த நிலையில் 13.90 வினாடிகளில் இப் போட்டியை நிறைவு செய்துள்ளார்.

Leave a comment

Comment