TamilsGuide

ஆரையம்பதி பகுதியில் இரவு வேளையில் திடீரென நுழைந்த காட்டு யானை - மக்கள் பதற்றம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இரவு நேரம் உள் நுழைந்த காட்டு யானைகள் பாலமுனை நகர் பகுதி பாடசாலை ஒன்றின் முன் நுழைவாயில் கதவினை உடைத்து, சேதப்படுத்தியதோடு மக்கள் குடியிருப்பு காணி சுற்றுப்புற வேலிகளை துவம்சம் செய்து ஆரையம்பதி நகர் பகுதிக்குள் உள் நுழைந்துள்ளது.

பாலமுனை, ஆரையம்பதி நகர் பகுதிக்குள் இரவில் திடீரென உள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் சஞ்சரிப்பதை அவதானித்த பிரதேசிவாசிகள் அவைகளை துரத்தும் பணியில் ஈடுபட்டு விரட்டி அடித்தனர்.

இதேவேளை, இந்தக் காட்டுயானைகள் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக உணவுதேடி சுற்றித்திரிந்து அச்சுறுத்தி வருவதாகவும் பிரதேச வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர் .
 

Leave a comment

Comment