TamilsGuide

சர்ச்சையில் முடிந்த கோப் குழு கலந்துரையாடல்

இலங்கை மின்சார சபையுடன் (CEB) தொடர்புடைய விடயங்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கை ட்ரான்ஸ் போர்மர்ஸ் நிறுவனம் (Lanka Transformers Company) நேற்று (24) கோப் குழுவில் ( Committee on Public Enterprises) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், ஒரு தனியார் நிறுவனத்தை குழுவின் முன் அழைத்தது குறித்து அக் குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எதிர்ப்பு தெரிவித்ததால், குழுவிற்குள் விவாத நிலைமை ஏற்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர இலங்கை மின்சார சபையின் விசாரணைகளை நிறைவு செய்வதற்கு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நிறுவனம் கோப் குழுவின் முன் அழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இதன்போது குறித்த தனியார் நிறுவனத்திற்கு கோப் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a comment

Comment