விரைவான மாற்றங்கள் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இங்கிலாந்தில் குடிநீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் 1976 க்குப் பின்னர் மிகவும் வறண்ட மாதங்களாக காணப்பட்ட நிலையில் இங்கிலாந்து முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் சராசரியாக 56.1% மட்டுமே நிரம்பியிருந்தன என அறிக்கைகள் தெரிவிக்கிறது.
இதனை ரீடிங் பல்கலைக்கழகத்தின் நீரியல் பேராசிரியர் ஹன்னா குளோக் தெரிவித்துள்ளார்.
நீர் தீர்ந்து போகும் வாய்ப்பு இருப்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும் வேண்டும் நாம் அவ்வாறு சிந்திக்க ஆரம்பித்தால்தான், நீரை பாதுகாக்கத் தொடங்குவோம், என்றும் இல்லையெனில் அதை முற்றிலும் சாதாரணமாக எடுத்துக்கொள்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் நீர் ஒரு பிரச்சனையாக மாறாமல் இருக்க, நாம் நீரை ப் பயன்படுத்தும் விதத்திலும், நீரை சேமிக்கும் விதத்திலும் மிக விரைவான மாற்றங்கள் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
கோடை காலம் எதிர்வரும் நாட்களில் மேலும் வெப்பமாகவே இருக்கும் என்பதால் இவ்வாறான மாற்றங்களை பின்பற்றி நீரை சேமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 2050 ஆண்டுகளில் , இங்கிலாந்து ஒவ்வொரு நாளும் ஐந்து பில்லியன் லீட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் எனவும் தெரிவிக்கப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.


