TamilsGuide

கனடாவில் தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது

தீபாவளி பண்டிகையையொட்டி, கனடா அஞ்சல் துறை சாா்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவின் பன்முக கலாசார கட்டமைப்பைக் கொண்டாடும் நோக்கில், இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தீபாவளி என்ற வாா்த்தையுடன் பாரம்பரிய ரங்கோலி படமும் இடம்பெற்றுள்ளது.

இது தொடா்பாக கனடா அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கனடா உள்பட உலகம் முழுவதும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், சமண மதத்தினரால் கொண்டாடப்படும் முக்கிய திருவிழா தீபாவளியாகும்.

கனடாவின் பன்முக கலாசாரக் கட்டமைப்பை அங்கீகரிக்கும் வகையில், தீபாவளி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுவது பெருமைக்குரியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் தலை வெளியீட்டுக்காக கனடா அஞ்சல் துறைக்கு இந்தியத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. 

Leave a comment

Comment