TamilsGuide

Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. 

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் Dude. இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார்.

சரத்குமார், டிராவிட் ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் சர்ச்சையில் சிக்கி கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், சூப்பர்ஹிட் ஆகியுள்ளது என்பதே உண்மை.

Dude திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில் இதுவரை 9 நாட்களை கடந்திருக்கும் Dude திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 9 நாட்களில் உலகளவில் ரூ. 106 கோடி வசூல் செய்துள்ளது. லவ் டுடே, டிராகன் படங்களை தொடர்ந்து Dude படமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக சாதனை படைத்துள்ளது ஹீரோ பிரதீப் ரங்கநாதன். 
 

Leave a comment

Comment