ஒருவரது வாழ்க்கையை மாற்றக்கூடிய உறுதியான ஒரு பெண்மணியை எப்போதாவது சந்தித்ததுண்டா? அப்படியான ஒருவர் 63 வயது அஞ்சு ஸ்ரீவஸ்தவா.
Wingreens Farms நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. நீண்ட 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய அவர், இந்திய வேளாண் மக்களின் நிலை கண்டு வருந்தினார்.
இந்தியா திரும்பியதும் வேளாண் மக்களுக்கு உதவும் முயற்சிகளில் களமிறங்கினார். இந்தியாவில் விவசாயிகளிடம் போதுமான நிலம் இருந்த போதிலும், அவர்களின் நிலை ஏழ்மையாகவே இருப்பதை அஞ்சு கவனித்தார்.
அந்த நிலையை மாற்ற தன்னால் இயன்ற உதவிகச்ளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த முயற்சிக்காக அவர் ஒரு சிறிய வேளாண் நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயிகளை வேலைக்கு அமர்த்தினார்.
அந்த நிலத்தில் அவர் வெளிநாட்டு மூலிகைகளை வளர்த்து, பின்னர் அவற்றை விற்க திட்டமிட்டார். இது ஒரு இலாபகரமான தொழிலாக இருக்கும் என்று அவர் நம்பினார். துரதிர்ஷ்டவசமாக, அவருக்கு அது திட்டமிட்டபடி நடக்கவில்லை.
மூலிகைகளை வாங்க வாடிக்கையாளர்கள் இல்லை. இருப்பினும், அஞ்சு தனது முயற்சிகளைக் கைவிடவில்லை. தொடர்ந்து ஒரு அற்புதமான திட்டத்துடன் களமிறங்கினார்.
அதாவது துளசியை பெஸ்டோ டிப் ஆக மாற்றி, நகரத்தின் சிறிய கடைகளில் விங்கிரீன்ஸ் ஃபார்ம்ஸ் என்ற பெயரில் விற்கத் தொடங்கினார். அந்த திட்டம் மெல்ல மெல்ல மக்கள் ஆதரவைப் பெற்றது.
அமெரிக்காவில் காணப்படுவது போல, இந்தியாவில் ஆரோக்கியமான, தரமான டிப் மற்றும் சாஸ்கள் இல்லை என்று அஞ்சு கண்டறிந்தார். அவர் 20 க்கும் மேற்பட்ட சுவைகளை உருவாக்கினார், தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவளித்தார், மெதுவாக Wingreens Farms சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது.
படிப்படியாக 90 சதவீத சந்தைப் பங்கைக் கைப்பற்றினர், தற்போது ஆண்டு விற்பனை ரூ. 250 கோடியைத் தாண்டியுள்ளது. அஞ்சு தனது சொந்த சாம்ராஜ்யத்தை மட்டும் உருவாக்கவில்லை, மாறாக ஆயிரக்கணக்கான உள்ளூர் விவசாயிகளுக்கு புதிய வாழ்க்கையை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


