TamilsGuide

தாய்லாந்தின் முன்னாள் தாய் ராணி காலமானார்

தாய்லாந்தின் தாய் ராணியாக இருந்த சிரிகிட் ராணி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்னின் 93 வயதான தாயான சிரிகிட் 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (24) பேங்கொக்கில் உள்ள வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் 2016ஆம் ஆண்டு காலமான, தாய்லாந்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பூமிபோல் அதுல்யாதேஜ் மன்னரின் மனைவியாவார்.

இதற்கிடையில், அவரது மறைவு தொடர்பாக அரச இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்யுமாறு மன்னர் வஜிரலோங்கோர்ன் தாய்லாந்து அரச குடும்ப அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Comment