TamilsGuide

ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது

மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை ஆரம்பிக்க ஆஸ்திரேலிய முதலீட்டாளர் குறித்த நபர்களுக்கு நிதி வழங்கியிருந்தார்.

இந்த வணிக முயற்சிகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தன்னந்தோட்டம் , ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்குவதுடன்

இவற்றிற்காக சுமார் 180 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தற்போது அது மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய சந்தேக நபர் ஒருவரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களையும் முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று (24) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Leave a comment

Comment