குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி பின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜயகாந்த், மோகன்லால், சிரஞ்சீவி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் மீனா தற்போது மூக்குத்தி அம்மன் 2 மற்றும் ரவுடி பேபி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மீனாவை போலவே அவருடைய மகளும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துவிட்டார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016ல் வெளிவந்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதன்பின் ஓரிரு படங்கள் நடித்த மீனாவின் மகள் நைனிகா தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 49 வயதாகும் நடிகை மீனா, க்யூட்டான லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, தன்னுடைய குறையாத அழகால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.


