TamilsGuide

ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் நடந்து வரும் நிலையில், இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் தரும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தது.

இதற்கிடையே, ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியில் உதவும் நிறுவனங்கள் மீதும் இந்தத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீட்டித்து வருகிறது.
 

Leave a comment

Comment