"நவரத்தினம்" 1977 மார்ச் மாதம் 5 ம் தேதி வெளிவந்து வெற்றிபெற்ற படம். சென்னையில் சாதாரண திரையரங்குகளில் வெளியாகி வியத்தகு வெற்றியை பெற்ற படம்.
சென்னையில் மொத்தம் 198 நாட்களிலே மொத்த வசூலாக ரூ 9,07,260.20. பெற்ற வெற்றிப் படம்.
சென்னை வெலிங்டன், மகாராணி, அபிராமி, ராம் தியேட்டர்களில் வெளியாகி அதிக பட்சமாக 56 நாட்களும், மொத்தம் 198 நாட்களும், தமிழகத்தில் மதுரை தங்கத்தில் 62 நாட்களும் ஓடி குறுகிய காலத்தில் அதிக வசூலை பெற்ற படமாக திகழ்கிறது. சென்னையில் பெரிய ஏசி திரையரங்கில் வெளியாகி இருந்தால் சென்னை வசூல் மட்டுமே 12 லட்சத்தை தொட்டிருக்கும்.
ஆனாலும் A P நாகராஜன் தயாரித்த படங்களிலே அதிக வசூல் பெற்ற படமாக திகழ்கிறது.
சங்கம் வளர்த்த மதுரையில் திராவிட சிங்கத்தின் கர்ஜனை தங்கம் திரையரங்கில் ஒலிக்கிறது என்றால் சிவாஜி ரசிகர்களுக்கு அங்கம் பதறி நம்ம வசூலுக்கு இனி பங்கம் வருமே நாம் இனி எங்கும் தலைகாட்ட முடியாதே! என தலைவரின் வெற்றி சங்கொலி கேட்டு துவண்டு விடுவார்கள். அதிலும் முதல் வார வசூல் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். தலைவரின் படங்களின் முதல் வார வசூலையே. சிவாஜியின் பல படங்கள் மொத்த வசூலில்
நெருங்க முடிவதில்லை.
"தலைவன்" படத்தின் முதல் வார வசூலையே அநேக சிவாஜியின் வெள்ளி விழா படங்கள் கூட நெருங்க முடியவில்லை. தங்கத்தில் ஜீலை 24 ல் வெளியாகி ஆக 28 வரை ஓடிய "தலைவன்" வசூல் லட்சத்தை எளிதில் கடந்தது. ஆக 29 ல் "தேடிவந்த மாப்பிள்ளை" வரவில்லையென்றால் 50 நாட்களை கடந்து கணேசனின் "கர்ணன்" வசூலை ஏப்பமிட்டிருக்கும்.
"தேடி வந்த மாப்பிள்ளை" தங்கத்தில் வெளியாகி 69 நாட்கள் ஓடி ரூ 2,27,000 வசூலாக பெற்று "கர்ணன்"
100 நாட்கள் வசூலை பந்தாடியது.
இதே அரங்கில் வெளியான "எதிரொலி" முதல் நாள்
6 மணிக்காட்சிக்கு பார்ப்பதற்கு ஆளின்றி சுமார் 30 சதமான ஆட்கள் தியேட்டருக்குள் வேடிக்கை பார்க்க சென்றதாக எங்களுக்கு மதுரையில் இருந்து தகவல் வந்தவுடன் இங்குள்ள தலைவர் ரசிகர்கள் குஷியாக இருந்தது என் ஞாபகத்திற்கு வருகிறது. "தலைவன்" ரிலீஸ் தேதி தள்ளி வைத்ததால், மொத்தம் 4 வாரம் சிரமப்பட்டு ஓட்டி ரூ 60000 வசூலை கூட எட்ட முடியாமல் தவித்த கதை சுவாரஸ்யமானது.
உதாரணமாக, "நவரத்தினம்" மதுரை தங்கத்தில் 62 நாட்களில் பெற்ற வசூலை சிவாஜியின் எந்த படமுமே நெருங்கவில்லை.
மதுரை தங்கத்தில் 62 நாள் வசூல்
ரூ. 3,34,497.86 . "உத்தமன்" 100 நாள் வசூல் நியூசினிமாவில் ரூ327000 தான். "நவரத்தினம்" 62 நாளில் பெற்ற வசூலை 100 நாட்களில் கூட பெற முடியாத "உத்தமன்" வெற்றி படம், அப்படித்தானே. ஏபிஎன்னின் "திருவிளையாடல்" 100 நாள் வசூல்
ரூ 2,86,000 தான். "தில்லானா மோகனாம்பாள்" 50 நாளில்
ரூ2,04,000 தான் பெற்றது. 132 நாளில்தான் ரூ 3,47,000 வசூலாக பெற்றது.
ஆக A P நாகராஜன் தயாரித்த அத்தனை படங்களிலும் குறுகிய காலத்தில் அதிக வசூலை பெற்ற படம் ஜொலிக்கும் "நவரத்தினம்" தான் என்பது உறுதியாகிறது. "பட்டிக்காடா பட்டணமா" 42 நாளில் சென்ட்ரலில்
பெற்றதோ ரூ 2,14,000 தான்.
சிவாஜியின் அத்தனை வெள்ளி விழா, வெற்றி விழா படங்களின் 62 நாட்கள் வசூல் அத்தனையும் "நவரத்தினம்" படத்தின் 62 நாள் வசூலுக்குள் அடக்கமாகி விட்டது.
அது மட்டுமா? தமிழகத்தையே கலக்கிய "ஆட்டுக்கார அலமேலு" படத்தின் 70 நாள் வசூலும் நவரத்தினத்தை விட குறைவுதான்.
"அண்ணன் ஒரு கோயில்" கேட்கவே வேண்டாம். வசந்த மாளிகை 55 நாட்களில் பெற்ற வசூல் ரூ2,40,.229.10. நெருங்க முடியுமா நவரத்தினத்தை. வாய்கூசாமல் தோல்வி படம் என்கிறீர்களே?, அப்படியானால் சிவாஜி நடித்த அத்தனையுமே தோல்வி படங்கள்தான்.
சும்மாவா தலைவருக்கு சிவாஜியைப் போல் பல மடங்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யானை அமர்ந்தால் கூட அதன் மீது உங்களால் ஏறி அமர முடியாது. இனி உங்கள் வசூல் விபரங்களை ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களோடு ஒப்பீடு செய்து திருப்தி பட்டுக் கொள்ளுங்கள். அதிலும் 'C' சென்ட்டரில் அவர்கள் வசூலை நெருங்குவது கடினம்தான். தலைவர் படத்தின் வசூல் அகில இந்திய அளவுக்கு பேசப்படும் போது நீங்கள் இனி வீண் முயற்சி செய்து பலனில்லை.
நன்றி:- நடிகப்பேரரசர் எம்ஜிஆர் குழு


