TamilsGuide

நோய்வாய் பட்டு இருந்த மனைவி அன்பு கணவனிடம் கேட்டாள்!!

நோய்வாய் பட்டு இருந்த மனைவி அன்பு கணவனிடம் கேட்டாள்!!
நான் இறந்து விட்டால் நீங்கள் எப்பொழுது மறு மணம் செய்து கொள்வீர்கள் என்று!!
அதற்கு கணவன் உன் கல்லறையின் ஈரம் என்று காய்கிறதோ அன்று நான் திருமணம் செய்து கொள்வேன்!!
சில வாரங்கள் கழிந்து அவர் மனைவி இறந்து போனார்!!
கணவனும் வாரம் ஒரு முறை அவரின் கல்லறை சென்று அதன் ஈரம் காய்ந்து விட்டதா என்று பார்க்க !! கல்லறை ஈரமாகவே இருந்தது!!
மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்த காரணத்தால்!! அவனும் திருமணம் செய்யாமல் காத்து இருந்தான் !!
இப்படியே 15 ஆண்டுகள் சென்றது!!
ஒரு நாள் எப்பொழுதும் செல்லும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பே மனைவியின் கல்லறையை பார்க்க சென்ற கணவனுக்கு ஒரே ஆச்சரியம் !! அவனுடைய மச்சினன் ( மனைவியின் சகோதரன் ) அங்கே இருக்க, என்ன செய்கிறாய் என்று கேட்க, அதற்கு அவன் அது என்னவென்று தெரயவில்லை சாகும் முன் என் தங்கை வாரம் ஒரு முறை என் கல்லறையை நீரால் ஈரமாக்க செய்ய சொல்லி இருந்தார் அதான் கடந்த 15 வருடமாக கல்லறையை ஈரமாக்கி விடுகிறேன்!! என்று சொல்ல !

மயங்கி சரிந்தான் !!
 

Leave a comment

Comment