TamilsGuide

சுசீலாம்மாவின் தோழி!

பி.சுசீலாவிற்கு இசை உலகில் தோழி யார் என்று கேட்டால் அதற்கு சரியான பதில் ..
அவரது சக பாடகிகள் எல்லாரும் தோழிகள் தான்.
யாருடனும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் இத்தனை வருடங்கள் திரை உலகில் நிலைத்திருப்பது ஒரு பெரிய சாதனை.
அதை பின்பற்றி மற்ற பாடகிகள் கூட ஒருவருக்கொருவர் சுமுகமாகவே பழகி வருகிறார்கள்..
தென்னகத்தில் பாடகிகளுக்குள் பெரிய சண்டையோ, புழுதி வாரி தூற்றிக்கொள்வதோ இல்லாமல் நீண்ட வருடங்கள் திரை உலகில் பயணம் செய்திருக்கிறார்கள்.
பி.சுசீலா போன்றவர்கள் பாடுவதில் மட்டுமல்ல, சக கலைஞர்களுடன் பண்புடன் பழகுவதிலும் கூட மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.
பி.சுசீலாவுக்கு நெருக்கமான ஒரு தோழி இருக்கிறார் என்றால் அது பின்னணி பாடகி "ஜமுனா ராணி " அவர்கள் தான்.
"மாமா மாமா மாமா", "காளை வயசு கட்டான சைசு", "பாட்டொன்று கேட்டேன்", "காவிரி தாயே காவிரி தாயே", "செந்தமிழ் தேன் மொழியாள்", "தாரா தாரா வந்தாரா:, "பக்கத்திலே கன்னி பொண்ணிருக்கு", "யாரடி நீ மோகினி", "குங்கும பூவே கொஞ்சு புறாவே", "நெஞ்சில் குடியிருக்கும்", "ஆதி மனிதன் காதலுக்கு பின்". "சித்திரத்தில் பெண் எழுதி", "காமுகர் நெஞ்சில் நீதியில்லை" என பல ஹிட்ஸ் நினைவில் வந்து போகிறதா? ஜமுனாராணி வயதில் பி.சுசீலாவை விட சிறியவர் என்றாலும் பி.சுசீலா திரை உலகில் அறிமுகம் ஆவதற்கு முன்னாலேயே திரை உலகில் அறிமுகமானவர்.
ஐம்பதுகளில் நிறைய இசை அமைப்பாளர்கள் திரை உலகை ஆக்கிரமித்து இருந்தார்கள். அதைப்போல் நிறைய பாடகிகளும் இருந்தார்கள். எல்லோருக்கும் ஒரு தனித்துவம் இருந்ததால் வாய்ப்புகளும் நிறைய இருந்தது. அந்த கால கட்டத்தில் ஜமுனாராணி நிறைய ஹிட்ஸ் கொடுத்தார்.

ஜமுனாராணி பி.சுசீலாவுக்கு நெருக்கமானவர் என்பதால் அடிக்கடி பி.சுசீலாவை சந்திப்பதுண்டு. பி.சுசீலாவுடன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தி இருக்கிறார்.
இவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
பி.சுசீலாவும் ஜமுனா ராணியும் இணைந்து பாடிய பாடல்கள் என்றால் முதன் முதலில் நினைவுக்கு வருவது "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்" பாடல் தான். அவ்வளவு பாப்புலர் அந்த பாடல் என்றால் மிகை இல்லை.
இவர்கள் இருவரும் ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே அறிமுகமாகி விட்டதால், இதற்கு முன்னாலேயே இணைந்து பாடி இருக்க வாய்ப்பு இருக்கிறது.
பலே பாண்டியா படத்தில் கவிஞர் கண்ணதாசனின் ஈடு செய்ய முடியாத வரிகளில் "அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே" பாடலையும் TMS, PBS. பி.சுசீலா, ஜமுனாராணி இணைந்து அசத்தி இருப்பார்கள். காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஓன்று.
இரு கதாநாயகிகளும், ஒரு கதாநாயகனும் நடிக்கும் முக்கோண காதல் கதைகளில் மூவரின் நிலைமையையும் சொல்லும் சோக காதல் பாடல்கள் இடம் பெறுவதுண்டு. அப்படி ஒரு காதல் பாடல் தான் மன்னாதி மன்னன் படத்தில் பி.பி.எஸ், பி.சுசீலா, ஜமுனாராணி பாடிய "நீயோ நானோ யார் நிலவே" என்ற பாடல். பத்மினிக்காக பி.சுசீலாவும், அஞ்சலி தேவிக்காக ஜமுனா ராணியும் பாடிய பாடல் அவ்வளவு அருமையாக இருக்கும். கேட்காதவர்கள் ஒரு முறையாவது கேட்டு ரசியுங்கள்.
அதே போல் சித்ராங்கி படத்திலும் "நெஞ்சினிலே நினைவு முகம்" என்ற பாடலும் முக்கோண காதலை சொல்லும் அழகான பாடல்.
A.M.ராஜா இசை அமைத்த மாபெரும்க வெற்றிப்படமான ல்யாண பரிசு படத்தில் " அக்காவுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு" பாடலும் இனிமையான பாடல்.
T.G.லிங்கப்பா இசை அமைத்து பெரும் வெற்றி பெற்ற "சபாஷ் மீனா" படத்தில் இடம் பெற்ற "ஆணாக பிறந்ததெல்லாம் அழகென்று தெரிந்த பின்னும்" என்ற பாடலும் பி.சுசீலா மற்றும் ஜமுனாராணி குரல்களில் ஒலித்த இளமையான பாடல்.
1987-இல் வெளிவந்த நாயகன் படத்தில் இளையராஜா இசையில் "நான் சிரித்தால் தீபாவளி" என்ற பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியும். ஜமுனாராணியும் இணைந்து பாடி இருந்தார்கள்.
அதே பாடலை "Naa Navve Deepavali" என தெலுங்கில் பி.சுசீலாவும். ஜமுனாராணியும் இணைந்து பாடினார்கள்

 

பிரசாந்த்!
 

Leave a comment

Comment