TamilsGuide

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ணன் போல் வாழ்ந்த நடிகர் திலகம்

கணபதியுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் தன் துணைவியாருடன்

திருச்சி அருகே #திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிகோவிலில் உள்ள யானை நடிகர் திலகம் சிவாஜியால் வழங்கப்பட்டது.

அந்த யானையை பராமரிக்க முடியாத நிலையில் கோவில் நிர்வாகம் சிவாஜியிடம் எங்கள் கோவில் வருமானத்தில் யானைக்கு தீனி போட
முடியவில்லை வேறு கோவிலுக்கு யானையை கொடுத்து விடுங்கள் என்று கூறினார்களாம்.

அதற்கு நடிகர் திலகம் நாளை வாருங்கள் பதில் சொல்கிறேன் என்று கூறினாராம் ஒரு வாரம் வரை பதில் வராத காரணத்தால் கோவில் நிர்வாகம் மீண்டும் நடிகர் திலகத்தை காண சென்ற போது அவர் சொன்ன வார்த்தை நிர்வாகத்திற்கு அதிர்ச்சி அளித்தது என்னவென்றால் கோவிலுக்கு அருகே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும் அந்த விளை நிலத்தில் பயிர் செய்து வரும் வருமானத்தில் கோவிலுக்கும் யானைக்கும் யானைப் பாகனுக்கும் விவசாயிக்கும் கொடுக்க ஏற்பாடு செய்து உள்ளதாகவும் யானைப் பாகனுக்கும் விவசாயிக்கும் வீடு ஒன்று அமைத்துத் தருவதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார் நடிகர் திலகம் ...

இன்று வரை நடந்துக் கொண்டு இருக்கிறது அந்த யானை இறந்த பிறகு மீண்டும் ஒரு யானையை வாங்கி கொடுத்துள்ளார் ..

இளைய திலகம் பிரபு அவர்கள் கோவிலுக்கு சமீபத்தில் சென்ற போது யானைப் பாகன் சொன்னார் ..
கஜ தானம் (யானை தானம்) செய்வது நாடு செழிப்புடன் எந்தவித பஞ்சம் இல்லாமல் மக்கள் வாழ செய்யும் தானம் ஆகும் ...

இது போல் கோவில்களுக்கு ஆறு யானை வாங்கிக் கொடுத்து உள்ளார் நடிகர் திலகம் என்பது குறிப்பிடத்தக்கது ..

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ணன் போல் வாழ்ந்துள்ளார் .

Prashantha Kumar
 

Leave a comment

Comment