கேஆர் விஜயா தங்கை திருமணத்தில் குழந்தை நட்சத்திரமான ஷாலினியும் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்வில் முன்னணி சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்
தன் கையில் இருந்த சந்தன மாலையை எம்.ஜி.ஆருக்கு அணிவிக்க உடனே எம்.ஜி.ஆர் , “ஷாலினியை அள்ளி கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார். பின் அவரிடம் ‘உங்க பேர் என்ன?’ என்று ஷாலினி கேட்டவுடன், அவரோ சிரித்துக் கொண்டே “எம்.ஜி.ஆர்”என்று கூறியுள்ளார்
உடனே ஷாலினி ,“அதுதான் தெரியுமே. அப்படின்னா என்ன அர்த்தம்?” என்று மறுபடியும் கேட்டாராம். உடனே, எம்.ஜி.ஆர் பலமாகச் சிரித்து கொண்டு "எம்.ஜி.ராமச்சந்திரன்" என்று அழுத்தமாச் சொன்னார்
அப்ப ஏன் எல்லோரும் உங்களை “எம்.ஜி.ஆர்”னு சொல்றாங்கன்னு திரும்பவும் கேட்க, மறுபடியும் பலமாகச் சிரித்தாராம் எம்.ஜி.ஆர்.
Prashantha Kumar


