TamilsGuide

வெள்ளவத்தையில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தை பகுதியில் பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (22) மாலை பாணந்துறையிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதுண்டு ஒருவர் ஒருவர் உயிரிழந்ததாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இறந்தவர் கடைசியாக கருப்பு நிற நீண்ட பேன்ட் மற்றும் வெள்ளை நீல நிற கை சட்டை அணிந்திருந்தார்.

மேலும் அவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்று நம்பப்படுகிறது.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
 

Leave a comment

Comment