TamilsGuide

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு

மண்சரிவு மற்றும் ரயில் தடம் புரண்டதால் ஞாயிற்றுக்கிழமை (19) முதல் பாதிக்கப்பட்டிருந்த கண்டிக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (23) காலை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

கனமழையால், ரம்புக்கனைக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் பாதையில் பல இடங்களில், குறிப்பாக கடிகமுவ – பலான ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்தது.

இதனால் பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன.

நேற்றும் (22) அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.

எனினும், இன்று காலை ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, காலி, கட்டுகொட பகுதியில் ரயில் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், பெலியாத்தவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் சாகரிகா ரயில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
 

Leave a comment

Comment