TamilsGuide

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகேநபர்கள் போதை ஒழிப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை ஒழிப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் நேற்று (22) குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் 20 மற்றும் 22 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களாவர் இவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment