சவூதி அரேபியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலான சர்ச்சைக்குரிய கஃபாலா தொழிலாளர் ஸ்பார்ன்சர்ஷிப் முறை ரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு, அந்த மாதம் தொடக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
இது ஒரு நவீன கால அடிமை முறையாக பார்க்கப்படுகிறது. இந்த முறைப்படி கஃபீல் என அழைக்கப்படும் உத்தரவாதம் வழங்குபவர் அல்லது பிணை வழங்குபவர் (பொதுவாக முதலாளி) தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் கட்டுப்படுத்த முடியும். அவர்கள் வேறு வேலைக்கு செல்ல விரும்பினால் அல்லது சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பினாலும் கூட, டிராவல் ஆவணங்களை பறிமுதல் வைத்துக் கொள்ள இந்த முறை அனுமதி அளித்தது.
இந்த முறையால் மாட்டிக்கொண்ட கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த செவிலியர் ஜெசிந்தா மென்டோன்சா வாழக்கை கொடுமையாக இருந்தது.
கணவர் இறந்ததால், மூன்று குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. செவிலியரான ஜெசிந்தா, செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை பார்த்து, மாதம் 25 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்பதால் கத்தாருக்கு செல்ல விரும்பினார். ஆனால், ஏஜென்ட் அவரை ஏமாற்றி சவூதி அரேபியாவுக்கு கடத்திச் சென்றனர்.
அங்கு உள்ள ஒருவரிடம் ஒப்படைத்தனர். அந்த உரிமையாளரின் தாய் மற்றும் மூன்று மனைவிகளுக்கு பணிபுரிய வேண்டியதாயிற்று. ஒரு நாளில் 16 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு, சரியாக சாப்பாடு வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். கஷ்டப்பட்டு அமைச்சகம் உதவியுடன் ஜெசிந்தா மீட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.
இந்த முறையால் இந்தியாவைச் சேர்ந்த 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்கு இனிமேல் இதுபோன்று கொடுமைகள் நடக்காது.
இஸ்ரேல் மற்றும் பஹ்ரைனில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதைப் போல, சவுதி அரேபியாவிலும் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்வாறு செய்யக்கூடாது. குவைத், லெபனான், கத்தார் போன்ற நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் இந்த முறை இன்னும் இருந்து வருகிறது.
இதுபோன்ற நாடுகளில் வெளிநாட்டைச் சேர்ந்த 2.5 கோடி வெளிநாட்டினர் வாழ்ந்து வருகின்றனர். அதில இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுமார் 75 லட்சம் பேர் ஆவார்கள்.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் "Vision 2030" மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த முறை ரத்து செய்யப்படும் என ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாட்டின் பிம்பத்தை மாற்றுவதற்காக பல டிரில்லியன் டாலர் செலவில் மறுசீரமைப்பு செய்ய பட்டத்து இளவரசர் முடிவு செய்துள்ளார். 2029 ஆசிய விளையாட்டு போட்டிக்கு முன்னதாக இந்த மறுசீரமைப்பு செய்ய சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்களில், 25 லட்சம் இந்தியர்கள் பயன் அடைவார்கள்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் பிற உலகளாவிய நிறுவனங்கள், வளைகுடா நாடுகள் கஃபாலா முறையைப் பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டின. அவை 'ஸ்பான்சர்ஷிப்' என்ற போர்வையில் மனித கடத்தலை அனுமதிப்பதாக குற்றம் சாட்டின.
பெண்கள்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. கஃபீல்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களை உரிமைக் குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளன. உதாரணமாக, 2017 ஆம் ஆண்டில், குஜராத்தில் ஒரு பெண் சவுதி அரேபியாவில் தனது 'ஸ்பான்சரால்' பாலியல் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டார், பின்னர் இந்திய அரசாங்கத்தால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
இதேபோல் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கஃபாலா தொழிலாளர் ஸ்பான்சர் முறை, 1950ஆம் ஆண்டுவாக்கில், வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு வந்த திறன் மற்றும் திறன் அற்ற தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் வகையில கொண்டு வரப்பட்டது. கட்டுமான தொழில் அல்லது உற்பத்தி துறைகளில் அவர்கள் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகித்தனர். பொருளாதார் சரிந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து தொழிலாளர்கள் கஃபீல் என்பதற்குள் கட்டப்பட்டனர். அவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. தொழிலளர்கள் வாழ்க்கை உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்தும் முதலாளிகளாக இருந்தனர்.
முதலாளின் அனுமதி இன்று அவதூறு வழக்கு தொடர முடியாது.


