TamilsGuide

தம்பியின்அன்புக் கட்டளையை ஏற்று , அசையாமல் சிலைக்கு போஸ் கொடுக்கும் அண்ணா

சென்னை மாநகராட்சித்தேர்தலில் திமுக வென்றபிறகு , பேரறிஞர் அண்ணாஅவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சிலைஅமைக்க வேண்டுமென்ற தங்களின் விருப்பத்தை அண்ணாவிடம் தெரிவிக்க, அதனை ஏற்க மறுத்த அண்ணா , பெருந்தலைவர் காமராசருக்கு வையுங்கள் என்று அறிவுறுத்த , அண்ணா சொன்ன படியே பெருந்தலைவர் காமராசருக்கு முதன்முதலாய் சென்னையில் சிலை அமைத்து,
அப்போதைய பிரதமர் பண்டித நேருவை அழைத்து அச்சிலையினை திறக்க ஆலோசனை வழங்கியவர் அண்ணா .

கழகத் தோழர்கள் பலரும்அதற்குப் பின்னரும் அண்ணாவுக்கு சிலை அமைக்க வேண்டும்என்று கோரியபோது , மறுத்த அண்ணா , மக்கள்திலகம் எம்ஜியார் தானே சிலைவைக்க விரும்புகிறேன், மறுக்கக் கூடாதுஎன்றுஅன்புக் கட்டளையிட , ஒத்துக் கொண்டார் அண்ணா . இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டின்போதுசென்னை அண்ணா சாலையில் சிலை திறக்கப்பட்டது . தம்பியின்அன்புக் கட்டளையை
ஏற்று , அசையாமல் சிலைக்கு ' போஸ்' கொடுக்கும் அண்ணா .
 

Leave a comment

Comment