மலையக ரயில் பாதையிலும் இன்று (22) ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கண்டி முதல் கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் பொல்கஹவெல இடையேயான 10 ரயில் பயணங்கள் இன்று காலை இரத்து செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக ரயில் பாதையின் இருபுறமும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், இன்று பிற்பகல் வரை ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மலையகப் பாதையில் ரயில் சேவைகள் இன்று நண்பகல் 12.00 மணி முதல் வழமைக்குத் திரும்பும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


