TamilsGuide

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) வெளியிட்டுள்ளது.

இது 2025 ஒக்டோபர் 21 முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, 

பச்சை அரிசி; கிலோ ஒன்றுக்கு 210 ரூபா

நாட்டு அரிசி; கிலோ ஒன்றுக்கு 220 ரூபா

சம்பா அரிசி: கிலோ ஒன்றுக்கு 230 ரூபா

பொன்னி சம்பா (கீரி சம்பாவுக்கு சமம்); ஒரு கிலோவுக்கு 240 ரூபா

பால் பொன்னி 255 ரூபா

எந்தவொரு இறக்குமதியாளரோ, விநியோகஸ்தரோ அல்லது வர்த்தகரோ இந்த இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்கவோ அல்லது வழங்கவோ கூடாது என்றும் வர்த்தமானி கூறுகிறது.
 

Leave a comment

Comment