பிரான்ஸ் நாட்டில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, லிபியாவில் இருந்து வந்த நிதியை தேர்தல் பிரசாரத்திற்கு நிதி அளிக்க சதி செய்ததாக முன்னாள் அதிபரான நிக்கோலஸ் சர்கோசி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டில் சர்கோசிக்கு கடந்த மாதம் தண்டனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரீஸில் உள்ள சிறைக்கு இன்று வந்தடைந்தார். அவர் தனது மனைவி, மகன், மகள், பேரண்களுடன் வந்தார். பின்னர், அவர் சிறைக்கு சென்றார். இன்று முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க இருக்கிறார்.
சிறைக்கு செல்லும் முன்பு, சமூக வலைத்தளத்தில் "நான் ஒரு அப்பாவி மனிதன். சிறையில் அடைக்கப்படுகிறேன்" எனத் தெரிவித்தார்.
சிறை வாசலில் அவரது ஏராளமான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். அவர்கள் நிக்கோலஸ், நிக்கோலஸ் என குரல் எழுப்பியதுடன், பிரான்ஸ் தேசியக் கீதத்தையும் பாடினார்.
இவருக்கு அளித்த தீர்ப்பின்படி, சிறைக்கு சென்ற பின்னரே மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் இரண்டு மாதங்களை வரை பரிசீலனை செய்யலாம். இதனால் சர்கோசி இரண்டு மாதங்கள் சிறையில் இருக்க வாய்ப்புள்ளது.
விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என சர்கோசி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


